ஸ்ரீ பைரவர் கோவில் கட்டுமானம்

ஸ்ரீ பைரவ அறக்கட்டளையின்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோவில் திருப்பணி

இந்த அற்புதமான கோவில் கட்டுமான திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
இதற்கான நிதி திரட்டுதல் கோரி நன்கொடை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

– இப்படிக்கு விஜய் சுவாமி ஜி பைரவபீடம் – 9585766669

ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர்

ஸ்ரீ பைரவா அறக்கட்டளை அனைவரையும் ஸ்ரீ பைரவர்கோவில் திருப்பணிகளில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறது. இந்த அறகட்டளை 2004-ம் ஆண்டு ஸ்ரீ பைரவரின் நல்லாசியுடன் தொடங்கபட்டது. இவ்வறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள் ஸ்ரீ பைரவருக்கு பாரம்பரியமிக்க ஒரு ஆலயத்தை நிர்மாணித்து அவ்விடத்தில் ஸ்ரீ பைரவரின் பக்தர்கள் வழிபாட்டுத்தளமாக பயன்படுத்த ஆலயத்தை நிர்வகித்தலும் ஆகும்.

ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம்

1 ஏக்கர் பரப்பளவு இடத்தின் மேற்குப்புறம் ஈரோடு- பழனிதார்ச்சாலை ஆலயம் அமையப் போகும் இடத்தைச் சுற்றி வடக்குப் புறத்தில் இருந்து கிழக்குப் புறம் ஓடும் நீரோடை , தெற்குப் புறத்தில் ஸ்ரீ பைரவா அறகட்டளை சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனை , அனாதைகள் காப்பகம் ,முதியோர் இல்லம் ,ஊனமுற்றோர் காப்பகம் அமைந்துள்ளது

கோபுரதரிசனம் கோடி புண்ணியம். அந்தக் கோவிலை கட்டுவதில், நம் பங்கும் இருப்பது என்பது ஏற்கனவே விதியில் எழுதப்பட்ட ஒன்றாகும். ஸ்ரீபைரவர் அறக்கட்டளை மூலம், ஸ்ரீ பைரவர் கோவில் திருப்பணிகள், பிப்ரவரி 28 2009-இல் திட்டமிடப்பட்டு, நடைபெற்று வருகிறது. கோவிலின் முகப்பில் 30 அடி உயர, பிரம்மாண்ட காலபைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மூலவர் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்.ஸ்வர்ண ஆகர்ஷன என்பதன் பொருள் சர்வமங்கலமும் அருள்பவர் என்பது ஆகும். பைரவர்கள் மொத்தம் அறுபத்திநால்வர்கள்(64) முகப்பிலும், கருவறையிலும் இருவர் அமர்ந்தது போக, மீதி 62 பைரவர்களும் 125"40 அடி பிரகார மண்டபத்தின் மேற்பகுதியில் சுதைசிற்பங்களாக செதுக்கப்பட உள்ளனர். இந்த அறப்பணியாம் திருப்பணியில் கலந்து கொண்டு, தங்கள் தலைமுறைகளும் சிவனருளில் திளைக்க, அன்புடன் அழைக்கிறோம். நீங்கள் அளிக்கும் ஒற்றை செங்கல்லோ, படிக்கல்லோ, தூணோ, மூலவரோ எதுவாயினும் உங்களின் பெயரை காலம் முழுதும் சொல்லும். உங்கள் தலைமுறைகள் செழித்தோங்க வாழ்த்தும். ஸ்வர்ண பைரவரின் கோவில் திருப்பணிகளை மேற்கொண்டு, சர்வ மங்கலங்களையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.

ஆலயத்தின் சிறப்புகள்

சிவபெருமானின் ஐந்து முகங்களில், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய ஸத்யோஜத முகத்தில் லிங்கம் அமைக்கப்பட்டு தற்சமயம், விஜய ஸ்வாமி யாகசாலையில் பூஜிக்கப்பட்ட வருகிறது. இந்த சத்திய முகம் என்பது பெயருக்கு ஏற்ப மிகவும் வலிமை வாய்ந்த அமைப்பு. நம்மிடம் சத்தியமும், சரணடைதலும் இருக்கும் பட்சத்தில் வேண்டியதைக் கொடுக்கும் சிவபெருமானின் கருணை முகம். சம்பா கரணை வதம் செய்வதற்காக சஷ்டி திதியன்று சிவபெருமான், ஸ்ரீ ஸ்வர்ணகர்ஷன பைரவராக அவதரித்து, அவனை வதம் செய்தார். இதனாலேயே சம்பா சஷ்டி என்பது, பைரவர் ஆலயங்களில் ஒரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இடஅமைப்பின் சிறப்புகள்

கோவில் நிலத்தின் வடக்கிலிருந்து, கிழக்கு நோக்கி பாயும் நீரோட்டம் ஒன்று இயற்கையாக அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு. இதன் ஈசானிய மூலையில் ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் ஆலயம் அமைந்து உள்ளது. இவ்வாறான அமைப்பு என்பது மிகவும் அரிதானது. காசி புண்ணிய ஸ்தலம் இவ்வாறு இயற்கையாக அமையப்பெற்ற ஒன்றாகும். இந்த இட அமைப்பும், சத்திய முகமும் சேர்ந்து இந்த இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு மிகவும் வலிமை கூட்டுகின்றன.

ஸ்ரீ பைரவர்கோவில் திருப்பணிகளில் பங்கு கொள்ள:(எங்கள் எதிர்கால செயல்பாடு)

தானம்

உங்களின் நன்கொடை ஒரு புண்ணிய தளத்தை உருவாக்க போகிறது.

தன்னார்வலர்கள்

திருப்பணிகளில் பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

எங்களின் பெருமைமிகு நன்கொடையாளர்கள்

கோவில் கட்டுவதென்பது கோடி புண்ணியம். கோடி புண்ணியர்களில் ஒருவராக உங்களையும் அழைக்கிறோம்.

ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர்

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் அதன் அதிபதிகளான பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளையும் நாமறிவோம். இந்த மும்மூர்த்திகளின் மூலத்தை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை. எது ஒன்றும் காரணமற்று, மூலமற்று உருவாவதில்லை, இல்லையா? இந்த திரி தேவர்களின் மூலம்தான் த்ரயம்பக பைரவர். சிவமும், சக்தியும் கலந்த நிலையில் இருக்கும் அர்த்தநாரியின் இன்னொரு வடிவமும் கூட. இத்தகைய பைரவருக்கு என தனிக்கோவில் எழுப்புவது என்பது நம்முடைய முற்பயனே. மூலவருக்கெல்லாம் முதல்வரான பைரவரை சரணடைந்து நம் வாழ்வை செழிக்கச் செய்வோம்.

எங்கள் இம்மாத நன்கொடையாளர்

Selvaraj

Chennai

Donated : RS 1,00,001

Guru

Delhi

Donated : RS 50,001

Ram

Mumbai

Donated : RS 20,001

Kumar

Andhra Pradesh

Donated : RS 10,001

உங்கள் பங்களிப்பை ஆன்லைனில் செய்யுங்கள்

GPay | PhonePe : 9443351497

SWARNA BAIRAVA PEEDAM TRUST

தொடர்பு கொள்ள

ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை கிராமம், ஈரோடு.

+91 - 9585766669
bairavafoundation@gmail.com